Advertisment

கருப்புக் கொடியை கைவிட்ட தி.மு.க, காவிக் கொடியை ஏந்தும் காலம் வரும்: சீமான்

கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
கருப்புக் கொடியை கைவிட்ட தி.மு.க, காவிக் கொடியை ஏந்தும் காலம் வரும்: சீமான்

NTK Seeman slams DMK comment on PM Modi Tamilnadu visit: பிரதமர் தமிழகத்தின் விருந்தினர் என திமுக கூறியுள்ள நிலையில், கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

Advertisment

கடந்த சில நாட்களாக, ஆளும் தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தின் போது மேடை ஏறிய தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தநிலையில், பிரதமர் ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, விருதுநகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தப்போது, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போது Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படும். அதே போல், அரசியல் கட்சியினரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தற்போது ஆளும் கட்சியாக உள்ள நிலையில், பிரதமரின் வருகை குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி, ஆர்.எஸ்.பாரதி, பிரதமர் தமிழக விருந்தினராக வருகிறார் என்று கூறினார்.

இதனை விமர்சிக்கும் விதமாக சீமான் தனது ட்விட்டர் பதிவில், ஆட்சிக்கு வரும் முன் ’கோ பேக் மோடி’ என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்க மாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள். மம்தாவுக்கும், பினராயி விஜயனுக்கு மட்டும் பகையாளியாக இருப்பவர், ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கி கறுப்புக்கொடியை கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியை கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை! என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Dmk Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment