நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.
வருண்குமார் ஐபிஎஸ் எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார். தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தொடக்கி வைத்த விழாவில் அவர் பேசியது மட்டும் வெளியே வருகிறதே அது எப்படி?.
என் கட்சியை குறை சொல்வதற்கு தான் அவர் ஐ.பி.எஸ் ஆனாரா? மோத வேண்டும் என்று ஆகிவிட்டால் மோதுவோம் வா. உன்னால் என்ன பண்ன முடியும்? என்று ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.
தமிழகத்தில் இதுவரை பாதித்த புயல் பாதிப்புகளுக்கு, ஒன்றிய அரசு இதுவரை உதவி செய்யவில்லை. மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துக் கொண்டு, பேரிடர் காலங்களில் கூட ஒன்றிய அரசு உதவுவது இல்லை. குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனை கேள்வி கேட்டால் ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள்.
அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கேவலமானது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் உணவை உறுதி செய்ய வேண்டும். உணவு, உடை என்பது அவரவர் உரிமை. மாடு புனிதம் என்றால், எதற்காக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“