scorecardresearch

திருவேற்காடு விடுதியில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

திருவேற்காட்டில் உள்ள தனியார் பெண்கள் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார்.

 நேற்று காலை வகுப்பிற்கு இவரது அறை தோழிகள் சென்றுவிட்டனர், மேலும் இவர் தங்கியிருந்த அறையில் இவர் தனியாக இருந்திருந்தார். அப்போது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  பின்னர், நீண்டநேரமாகியும் சுமதி வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது சுமதி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சக மாணவிகள் கதவை உடைத்து உள்ளே சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் கால்வதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதவில்லை என்று நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் கல்லூரி இருக்கும் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nursing college student suicide in chennai

Best of Express