சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி, கே.கே.நகரில் உள்ளா மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. ஆனால், அதன்பின் அழகேசனின் பழக்கவழக்கம் சரியில்லை என்பதை அறிந்த அஸ்வினி, அவருடனான காதலை துண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும், அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுக்க, காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்திருக்கிறார்.
இதனால் கைது செய்யப்பட்ட அழகேசன் ஜாமீனில் வெளிவந்து, இன்று கல்லூரி முடிந்து வெளிவந்த அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அழகேசனை ஆயுதத்துடன் பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அடித்ததால் படுகாயமடைந்த அழகேசன், தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைக்கான உண்மையான காரணம் குறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி ஓ.பி.எஸ் தனது ட்விட்டரில், ” சென்னையில் கேகே நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சென்னையில் கேகே நகர் தனியார் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
— O Panneerselvam (@OfficeOfOPS) 9 March 2018
குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) 9 March 2018
குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பகுத்தறியும் பண்பான இளம்தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.