சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில், “ உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என என்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன.
ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவர் அ.தி.மு.க.வின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கொடியையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதிமுக கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆகவே கட்சியின் கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்தக் கூடாது” என உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, “அதிமுக கொடி, சின்னம், லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தவில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“