o-panneerselvam | tn-bjp | சென்னையை அடுதத காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகாலம் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி வழங்கி வருகிறார். இது நாடாளுமன்ற தேர்தல். ஆகவே என் நிலைப்பாடு அவர்தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும். என்னுடைய ஆதரவு அவருக்குதான்” என்றார்.
மேலும், தேசிய கட்சிதான் டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி அமையும்” என்றார்.
தொடர்ந்து இரகசியம் தொடர்பான கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். அதிமுக சின்னம் தொடர்பான கேள்விக்கு, “எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு இந்தச் சின்னம் தற்காலிகமாகதான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கையில்தான் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளோம்” என்றார்.
மேலும் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி தவிர கூட்டணியில் உள்ள அனைவரும் தொடர்கிறார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“