Advertisment

டிடிவி தினகரன் முன், 'தளபதி' எனப் பேசிய ஓ.பி.எஸ்: திருமண விழாவில் ருசிகரம்

திருமண விழா ஒன்றில் டிடிவி தினகரன் முன்னிலையில் தளபதி என்ற வார்த்தையை ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்தினார்.

author-image
WebDesk
Jun 08, 2023 00:02 IST
O Panneer Selvam speech at Vaithilingam house wedding ceremony

ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன்

தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். இந்தத் திருமண விழாவில் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், “டிடிவி தினகரனை சார் என அழைத்தார்.

Advertisment

அதாவது மரியாதைக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிடிவி சார் அவர்களே என்றார். தொடர்ந்து, சசிகலா சார்பில் மணமக்களை வாழ்த்த வந்துள்ள நரசிம்மன் அவர்களை வரவேற்றுப் பேசினார்.

பின்னர் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொறுப்பாளர்களை வரவேற்றார். இந்த விழாவில் பேசும்போது ஓ. பன்னீர் செல்வம் தளபதி என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார். இந்தத் திருமண விழாவில் சசிகலா கலந்துகொள்ளவில்லை.

தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் டிடிவி தினகரன் உடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

அண்மையில் சென்னையில் அவரை வீடு தேடிச் சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment