அதிமுக ஓ.பி.எஸ் அணியின் அரசியல் அலோசகராக பண்ருட்டி ராமசந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
Advertisment
அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி சாமசந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவித்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பண்ருட்டி ராமசந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக ஓபிஸ் அறிவித்தார். மேலும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த ஓபிஎஸ்-யுடன் அவர் வந்திருந்தார்.
இந்நிலையில் ஓ.பி.எஸ் அணியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமந்திரனை அவர் நியமித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை அவர் வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: இ.பி.எஸ்
இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை கருத்து மேலொங்கிய நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் தனித்து செயல்பட்டுவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“