கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இரட்டை தலைமையாக இருந்த அதிமுகவில், கடந்த ஆண்டு ஒற்றை தலைமை சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யபப்ட்டார்.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கட்சியிலிருந்து பொதுக்குழு நீக்கியது. இந்நிலையில் இதற்கு எதிராக ஓ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் சிவில் வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மீண்டும் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டார். இதன் மூலம் சென்ற ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும். ஓ.பி,எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கியது செல்லும் என்றும் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் தெளிவுப்படுத்தியது.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் நேற்று உடனடியாகவே மேல்முறையீடு செய்தார். இரு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இந்த மேல்முறையீடு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மேல்முறையீட்டை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உத்தரவின் அசல் நகலை வைப்பதற்கு கால அவகாசம் கேட்டதன் அடிப்படையில் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களுடைய மனுக்களின் மீதான உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்குகளையும் இந்த வழக்கோடு இணைத்து பட்டியலிட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர், ஆனால் இந்த கோரிக்கை நீதிமன்றத்தால் மறுக்கபட்டது.இந்நிலையில் “ இதற்குத்தானா நேற்று அத்தனை அவசரத்தோடு நீதிமன்றத்தில் முறையீடு செய்தீர்கள்’என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.