ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓ.பி.எஸ் தரப்பு அறிவித்துள்ளது.
அதிமுக கட்சி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்று இரண்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தென்னரசு மற்றும் ஓ. பன்னீர் செல்வம் சார்பாக செந்தில் முருகன் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அறிவுறித்தலின்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டது. ஓ.பி.எஸ் தரப்பிற்கும் அனுப்பப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ் தரப்பினர் அதை நிராகரித்தனர்.
இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு ஆவணங்களோடு தமிழ்மகன் உசைன் டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் ஓ.பி.எஸ் தரப்பினர் தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். “ தம்பி செந்தில் முருகன் போட்டியிலிருந்து விலகுகிறார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான். நாங்கள் விலகியது தென்னரசுக்காக அல்ல. இரட்டை இலை வெற்றி பெருவதற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். இரட்டை இலை வெற்றிபெறுவதற்காக பிரச்சாரம் செய்வோம். எடப்பாடி பழனிசாமி யாரை அறிவித்தாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை . இரட்டை இலை என்பது எம்.ஜி.ஆர் கண்ட சின்னம் . இதை தொடர்ந்து காப்பாறியது அம்மா. இந்த சின்னம் வெற்றிபெற வாக்களியுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்போம்” என்று பேசியுள்ளனர்.