Advertisment

இலங்கைக்கு ஓபிஎஸ் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

author-image
WebDesk
Aug 17, 2022 08:52 IST
New Update
panneerselvam

O panneerselvam family donates RS 50 lakhs to sri lanka

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஓபிஎஸ் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Advertisment

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்  அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

அப்போது தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்நிலையில், சட்டசபையில் அளித்த வாக்குறுதியின்படி, தனது மூத்த மகன் ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயபிரதீப் வங்கிக்கணக்கில் இருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்துக்கான வரைவோலைகளை (டி.டி.), நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு, ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய் கிழமை அனுப்பி வைத்தார். மேலும் ஓபிஎஸ், நிதிச் செயலாளரிடம் பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கவும் வலியுறுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment