அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள்தான் முடிவெடுப்பார்கள்” என்று திங்கள்கிழமை கூறினார்.
2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்தியவர் பன்னீர்செல்வம்தான் என்று குறிப்பிட்ட அதிமுக என மூத்த தலைவர் ஜெயக்குமார் அவர் கட்சியின் நிலைப்பாட்டையே கிட்டத்தட்ட மாற்றியமைக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தன்னைத் தானே அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்ட சசிகலா, அதிமுகவைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிராகரித்த நிலையில் அஓ.பி.எஸ்-ன் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், ஏற்றுக்கொள்வதும், ஏற்காததும் மக்களின் கையில் உள்ளது என்றார். அவரை அதிமுக மீண்டும் கட்சியில் சேர்க்குமா என்ற கேள்விக்கு, அது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கூறுகையில், அதிமுகவைத் தொடங்கிய எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சி தொண்டர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்றும் தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அடங்கிய கட்டமைப்பின் அடிப்படையில் கட்சி இயங்கி வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து, அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தை நினைவு கூர்ந்தார். ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான முகாம்களை ஒன்றிணைவதற்கு சசிகலாவுடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று முன்நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சமீபத்தில் சசிகலா சில அதிமுகவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, சசிகலாவுடன் போனில் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
“சசிகலாவுடன் யாருக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்று சமீபத்தில் கட்சி தீர்மானத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. கட்சியின் இந்த முடிவை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கட்சி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இது போன்ற கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்வது எனது கடமை” என்று ஜெயக்குமார் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் நடந்த ஆலோசனைகளை அடுத்து சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், பன்னீர்செல்வமும் இந்த நடவடிக்கையில் கையெழுத்திட்டுள்ளார் என்று கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பக்கம் ஒருபோதும் சசிகலாவின் நிற்கமாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் சில பொய்யான கருத்துகளுக்கு மாறாக, 2016ல் மறைந்த தலைவர் ஜெ. ஜெயலலிதாவால்தான் நான் அமைச்சராக நியமிக்கப்பட்டேன். சசிகலாவால் அல்ல என்று கூறினார்.
சசிகலா குறித்து கட்சிக்குள் எந்த விவாதமும் நடக்காது என்று உத்திரவாதம் அளிக்க முடியுமா என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், பன்னீர்செல்வமும், பழனிசாமியும்தான் ஆலோசிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும் என்றார்.
அதிமுகவின் ஓராண்டு பொன்விழா கொண்டாட்டங்கள் தொடங்குவதை முன்னிட்டு, அக்டோபர் 16ம் தேதி சசிகலா அதிமுகவைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் தனது முயற்சிகளை மேற்கொண்டார்.
அதிமுக பொன்விழா கொண்டாட்ட தொடக்க நாளில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதி மற்றும் நினைவிடத்திற்குச் சசிகலா அஞ்சலி செலுத்த சென்றார். அங்கே அவரை வரவேற்க ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அக்டோபர் 17ம் தேதி, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதிமுக ‘ஒற்றுமை’யை வலியுறுத்துவதன் மூலம் கட்சியின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதற்கான சசிகலாவின் புதிய முயற்சியை இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி மற்றும் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்த்துள்ளனர்.
அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது உள்பட 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அவர் அறிவித்திருந்த போதிலும், அதிமுக ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கும் என்று மே மாதம் அவர் சூசகமாகத் தெரிவித்தார். அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில அதிமுகவினருடன் அவர் போனில் பேசிய ஆடியோ கிளிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவினர் நடவடிக்கையை எதிர்கொண்டனர்.
சசிகலா பிப்ரவரி 2017 முதல் 4 ஆண்டு சிறைத்தண்டனையை நிறைவு செய்து பிப்ரவரி 8, 2021 விடுதலையாகி தமிழ்நாடு திரும்பினார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார்.
திமுக ஆட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், ஆளும் கட்சியை கடுமையாக சாடினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.