'சுயநலம் வேண்டாம்; கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்': ஓ.பி.எஸ் பரபர அறிக்கை

'கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல், கட்சியை கைப்பற்றி கொள்வதிலும், கட்சியை காப்பாற்றுவதே முக்கியம்' என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல், கட்சியை கைப்பற்றி கொள்வதிலும், கட்சியை காப்பாற்றுவதே முக்கியம்' என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
O Panneerselvam latest statement on Vikravandi by election 2024 AIADMK participating Tamil News

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க ஆதரவுடன் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி ஐ.யூ.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி அமோக வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம் 2 ஆம் இடம் பிடித்தார். அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் 3 ஆம் இடம் பிடித்தார். 

Advertisment

தவிர, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தோல்வியுற்றது. 12 தொகுதிகளில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளிய பா.ஜ.க 2 ஆம் இடம் பிடித்தது. 7 தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த படுதோல்வி அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்தார். இதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்தார்.  

இதனிடையே, ஓ.பன்னீர் செல்வத்தின் தேர்தல் தோல்வியை அடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

ஓ.பி.எஸ் அறிக்கை 

இந்த நிலையில், 'கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல், கட்சியை கைப்பற்றி கொள்வதிலும், கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரை களமிறக்கும் முடிவினை அறிவிக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பான அவரது அறிக்கையில், “எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா?. இல்லை ஒன்றுபட்ட அதிமுக என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியைக் களமிறக்கி 2019 இல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது. எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ எனச் சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வதினும் கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk O Panneerselvam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: