விமானத்தில் செல்போனை தவறவிட்ட ஓபிஎஸ்: மீட்டுக் கொடுத்த அதிகாரிகள்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது செல்போனை விமானத்தில் தவறவிட்ட நிலையில், விமான நிலைய அதிகாரிகள் அதனை மீட்டுக் கொடுத்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது செல்போனை விமானத்தில் தவறவிட்ட நிலையில், விமான நிலைய அதிகாரிகள் அதனை மீட்டுக் கொடுத்தனர்.

author-image
WebDesk
New Update
O Panneerselvam latest statement on Vikravandi by election 2024 AIADMK participating Tamil News

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது செல்போனை விமானத்தில் தவறவிட்டார்.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை மதுரையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார். விமானத்தில் இருந்து வெளியேறிய அவர், காரில் வந்து அமர்ந்த போது தன்னுடைய செல்போனை விமானத்திலேயே தவறவிட்டதை கண்டறிந்தார்.

இதனால் தான் தவறவிட்ட செல்போனை எடுத்து வருமாறு போலீசாரிடம் ஓபிஎஸ் கேட்டுள்ளார். இத்தகவல் விமான நிலைய மேலாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானத்தில் ஓபிஎஸ் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து செல்போன் மீட்கப்பட்டு, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், செல்போன் உடனடியாக ஓபிஎஸ்-இடம் ஒப்படைக்கப்படவில்லை. விமானத்தில் தவறவிட்ட பொருள்களை பெறுவதற்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை முடித்த பின்னர் செல்போனை, அவரது வீட்டிற்கு அனுப்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஓபிஎஸ் தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

Advertisment
Advertisements

இதையடுத்து, விதிமுறைகள் அனைத்தும் சரியாக முடிக்கப்பட்ட பின்னர் சுமார் 1 மணி நேரத்தில் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்போன் கொடுத்து அனுப்பப்பட்டது.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Airport O Panneerselvam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: