O Panneerselvam - AIADMK Flag Tamil News: அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார். இதனை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே அதில் வெற்றி கிடைத்தது. இதனால், அடுத்து ஓ. பன்னீர் செல்வம் புதிய கட்சி தொடங்க போகிறார் என செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், நேற்று போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். தொடர்ந்து சென்னையில் மாநாடு நடத்தப்போவதாகவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அதன்படி, இன்று காஞ்சிபுரத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க கொடியினை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என கூறினார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், அ.தி.மு.க கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். மற்ற தலைவர்களையும் தொடர்ந்து சந்திப்பேன். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். நீதியை நிலைநாட்டவே சென்னையில் இந்த மாநாட்டை நடத்துகிறோம்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil“