சென்னை தீவுத்திடலில் உள்ள விஜயகாந்த் உடலுக்கு ஓ.பி.எஸ் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார், “ தே.மு.திக தலைவர் விஜயகாந்த் மறைவால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஆழந்த வருத்ததில் இருக்கிறார்கள். சிறந்த திரைப்பட நடிகர். அன்பாகவும், பாசமாகவும் மரியாதையுடன் பழககக்கூடியவர். திரைப்பட கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். ஏழை மக்களின் துயரத்தை போக்கி உள்ளார். நடிகர் சங்கம் இடர்பாடுகளில் இருந்து மீண்டு எழ உதவி செய்தவர். அரசியலில் ஒரு இயக்கம் ஆரம்பித்து, மக்களிடம் நன்மதிப்பையும், தொண்டர்களின் ஆதரவையும் பெற்றவர். தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற பெருமை பெற்றவர். பல்வேறு புகழுக்கு உரியவர். 125 திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அவரது நடிப்பு மூலம் அனைத்து மக்களையும் கவர்ந்தவர்.
2011-ல் மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைக்க முடிவு செய்தார். அப்போது கூட்டணிக்கு விஜயகாந்த் ஆதரவு அளித்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றியடைந்து முதலமைச்சராக காரணமாக இருந்தவர் விஜயகாந்த். கூட்டணி ஏற்படுவதற்கு அன்னியார் அவர்கள், பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை எங்களால் மறுக்க முடியாது. இந்த நாள் வரை அண்ணனை கவனித்து வந்த அண்ணியார் மற்றும் அவரது மகன்கள் மற்றும் தொண்டர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா இறைவனிடம் சாந்தி பெற வேண்டும் “ என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“