மா.செ.க்களுடன் ஓ.பி.எஸ் திடீர் ஆலோசனை: சென்னையில் திரளும் ஆதரவாளர்கள் | Indian Express Tamil

மா.செ.க்களுடன் ஓ.பி.எஸ் திடீர் ஆலோசனை: சென்னையில் திரளும் ஆதரவாளர்கள்

தமிழகம் முழுவதும் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னையில் பங்குகொண்டனர்.

மா.செ.க்களுடன் ஓ.பி.எஸ் திடீர் ஆலோசனை: சென்னையில் திரளும் ஆதரவாளர்கள்

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் அஞ்சலி செலுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னையில் பங்குகொண்டனர்.

சென்னையில் மாவட்ட செயலாளர்கள், இளைஞரணி மாவட்ட செயலாளர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பங்கேற்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன், பெரம்பலூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அமைதி பேரணியும் நடத்தவிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: O pannerselvam invites volunteers to visit memorial of former chief minister j jayalalitha