கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சொகுசுப் படகுகள் ஏற்கனவே இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், படகு துறையில் கட்டப்பட்டிருந்த அதி நவீன செகுசு படகுகளான தாமர பரணி, திருவள்ளுவர் ஆகிய படகுகளை கடந்த மே24ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் நாளே 1000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் படகு துறை இயக்கியது. தொடர்ந்து, வட்டக்கோட்டை வரை ஒன்றரை மணி நேரம் கடல் பயணத்தில் எவ்வித பாதிப்பு கவசமும் அணியாது கடலில் படகு பயணம் மக்கள் மத்தியில் ஒரு அச்சம் நிறைந்த கேள்வியாக எழுந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் மட்டும் அல்லாது சமூக ஆர்வலர்கள் எழுப்பும் பாதுகாப்பு கவசங்கள் தேவைக்கு ஏற்ப இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில, கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிகாரிகள் இடம் பொதுமக்களின் அச்சம் பற்றி கேட்டபோது.தேவைக்கு அதிகமான பாதுகாப்பு கவசம் உள்ளது.பல பயணிகள் பாதுகாப்பு கவசம் அணிவதில் கவனம் செலுத்துவது இல்லை” என்றனர்.
மேலும், கன்னியாகுமரி வட்டக்கோட்டை சொகுசு படகு பயணத்தில் பயணிகள் பாதுகாப்பு கவசம் கட்டாயம் என்பதை வலியுறுத்துவோம்” என்றனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“