2019 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்.15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பித்த பெண்களில் 35 சதவீதம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.
அப்போது இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது” என்றார்.
இந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதத்தை தொடர்ந்து நவம்பர் மாத மகளிர் உரிமைத் தொகை தீபாவளியை முன்னிட்டு நவ.10ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி முதல் வரவு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“