scorecardresearch

காலியிடங்களால் தவித்து வரும் வனத்துறை; 3 மாதங்களில் நிரப்பப்படும் என தகவல்

50%க்கும் அதிகமான காலியிடங்களால் தவித்து வரும் வனத்துறை; 3 மாதங்களில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தகவல்

state government trying to ease the restrictions in private forests

Officials say forest department vacancies filled in 3 months: தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 50%க்கும் அதிகமான பணியிடங்கள் 3 மாதங்களுக்குள் நிரப்பப்படும் என சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழக வனத்துறை 50%க்கும் அதிகமான காலி பணியிடங்கள் காரணமாக, கடுமையான பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. இந்த பணியிடங்களில் வனக்காவலர்கள், காவலர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் போன்ற பணியிடங்கள் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளன.

மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 542 வன வரம்பு அலுவலர் (ரேஞ்சர்) பணியிடங்களில் சுமார் 12 காலியாக உள்ளன. மொத்தம் அனுமதிக்கப்பட்ட 1629 வனக் காவலர் பணியிடங்களில் 910 இடங்கள் காலியாக உள்ளன. 127 தோட்டக்காரர் பணியிடங்களில் 58 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், 177 வனத்துறையினர், 415 வனக்காவலர்கள் மற்றும் 210 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதேநேரம் சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில், அனுமதிக்கப்பட்ட 160 பணியிடங்களில், 85 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியாளர் பற்றாக்குறையால் உயிரியல் பூங்காவில் விலங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

இதனிடையே ”ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் பலர் பத்தாண்டுகளாக பணி நிரந்தரம் செய்ய  கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களில் சிலர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாகவும், காலிப்பணியிடங்கள் இருந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை” என்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: தவறு செய்யும் போலீசாருக்கு இந்த ஆட்சியில் இடமில்லை: சட்டமன்றத்தில் ஸ்டாலின் கறார்

காலியிடங்கள் குறித்து வனத்துறை தரப்பில் கேட்டப்போது, சென்னை மண்டலத்தில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் களப்பணியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது, இதில் காடு மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு அடங்கியுள்ளது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், ”இந்த காலியிடங்களை நிரப்ப ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்புவோம்,” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Officials say forest department vacancies filled in 3 months