/tamil-ie/media/media_files/uploads/2022/02/murder.jpg)
ஓ.டி.பி எண் சொல்வதில் தாமதம்… ஓலா கார் டிரைவரால் ஐ.டி ஊழியர் அடித்துக் கொலை
ஓ.டி.பி எண் சொல்வதில் தாமதம்... சண்டையிட்ட ஓலா கார் டிரைவர்; குடும்பத்தினர் கண் முன்னே ஐ.டி. ஊழியர் அடித்துக் கொலை
/tamil-ie/media/media_files/uploads/2022/02/murder.jpg)
Advertisment
Ola cab driver killed IT employee for delaying OTP: சென்னையில், ஓ.டி.பி எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில், மென்பொறியாளர் ஒருவர், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் ஓலா கார் டிரைவரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த எச்.உமேந்தர் (34), தனது மனைவி பவ்யா (34), இரண்டு குழந்தைகள் மற்றும் பவ்யாவின் சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் நாவலூரில் உள்ள ஒரு மாலில் படம் பார்க்க சென்றிருந்தார்.
படம் முடிந்து அனைவரும் வெளியே வந்தப்போது, திரும்பிச் செல்வதற்காக பவ்யாவின் சகோதரி, ஓலா காரை புக் செய்துள்ளார். கார் வந்ததும், அனைவரும் டிரைவரின் அனுமதியின்றி காரில் ஏறி அமர்ந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: சென்னையில் 2 நாட்கள் பல இடங்களில் மின்தடை! எங்கெங்கே தெரியுமா?
அப்போது சேலத்தைச் சேர்ந்த கேப் டிரைவர் என்.ரவி (41) ஓ.டி.பி எண்ணைக் கேட்க, பவ்யாவின் சகோதரி அதனை தேட, ஓ.டி.பி எண்ணை கூறிய பின் காரில் ஏற வேண்டும் என கோபமாக பேசியுள்ளார் டிரைவர் ரவி.
இதனால் குடும்பத்தினருக்கும், டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், டிரைவர் உமேந்தர் குடும்பத்தை கீழே இறங்க சொல்லியிருக்கிறார். கீழே இறங்கும்போது உமேந்தர் கார் கதவை வேகமாக சாத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், உமேந்தருடன் சண்டையிட, இருவருக்கும் கைகலப்பானது, அப்போது டிரைவர் ரவி தனது செல்போனைக் கொண்டு, உமேந்தரை தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து மயங்கி விழுந்த உமேந்தர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பவ்யாவின் புகாரின்படி, டிரைவர் ரவி அவரை பலமுறை குத்தியதால் உமேந்தர் மயங்கி விழுந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ரவி தப்பி ஓட முயல்கையில், அருகிலிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றி வரும் உமேந்தர், வார இறுதியை தனது குடும்பத்தினருடன் கழிப்பதற்காக சனிக்கிழமை கூடுவாஞ்சேரிக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.