Advertisment

வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் எதிரொலி: 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல் செய்யும் ஓலா, ஊபர்

இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Ola, Uber drivers on strike in Chennai rate per KM sky rocketed Tamil News

இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளதாக என்று ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

Chennai | ola | uber: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால்டாக்சி உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை என்றும், அந்நிறுவனங்கள் கமிஷன்தொகையை அதிகமாக எடுத்துக் கொள்வதாகவும், அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கால்டாக்சிகளை இயக்கி வரும் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்:  Ola, Uber services hit in Tamil Nadu as taxi drivers begin 2-day strike, what are their demands?

இந்த நிலையில், கால்டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும், பைக் டாக்சிமுறையை ரத்து செய்ய வேண்டும், கால்டாக்சிகளுக்கு அரசே தனி செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்கள் சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஓட்டுநர்கள் தங்களது போனில் இருந்து செயலியை நீக்கி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரை,திருச்சி, கோவையிலும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளதாக என்று ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் செயலியில் இருந்து விலகியுள்ளனர். 

இந்த நிலையில், குறைந்த அளவிலான ஓட்டுனர்களே வாகனங்களை இயக்கி வருவதால் ஓலா, ஊபர் பயணக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் போராட்டத்திற்கு முன் 20 கி.மீ தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 2 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Uber ola
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment