மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு காட்டு விலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன குறிப்பாக காட்டு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, புலி, காட்டு பன்றி ஆகியவை உள்ளன. இதில் குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் டேம் மேல்குறவன் கண்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஸ்ரீரங்கன் வயது 70 என்பவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மேல்குறவன்கண்டி வனப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை ஶ்ரீ ரங்கனை தாக்கி உள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ஶ்ரீ ரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து காரமடை காவல்துறை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர் ஶ்ரீ ரங்கன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை தாக்கி ஆதிவாசி முதியவர் உயிர் இழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“