scorecardresearch

கலெக்டர்  அலுவலகத்தில் முதியவர் திடீர் தர்ணா போராட்டம்

நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.மேலும் அவரை அப்புறப்படுத்த வந்த காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதயவர் திடீர் தர்ணா போராட்டம்
முதயவர் திடீர் தர்ணா போராட்டம்

நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.மேலும் அவரை அப்புறப்படுத்த வந்த காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பாளையம் எஸ்எஸ்குளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர், குன்னத்தூர் பகுதியில் தனக்கு சொந்தமான   ஒன்றரை ஏக்கர் நிலத்தை LGB என்ற தனியார் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு அபகரித்து விட்டதாகவும் இது குறித்து ஆர்டிஓ வில் புகார் தெரிவிக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அந்த நிலம் தனக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று வரை தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டுத் தரவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனு அளித்து விட்டு வெளியில் வந்த அவர் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பல வருடங்களாக தனது நிலத்தை அதிகாரிகள் மீட்டு தராமல் இழுத்தடித்து வருவதாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  மாவட்ட ஆட்சித்தலைவர் தனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

முன்னதாக தர்ணாவில் ஈடுபட்ட முதியவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்புறப்படுத்த முயன்ற போது காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Old men protest in collector office kovai