Old Pension Scheme in India: பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணப்பலன் அளிக்க கூடிய ஒரு ஓய்வூதிய திட்டம். இது அரசு ஊழியராக ஒருவர் குறிப்பிட்ட ஆண்டுகள் வேலை செய்து சம்பளம் வாங்கியதன் அடிப்படையில் நிலையான ஓய்வூதியம் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் மறுபுறம் சந்தைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதன் விளைவாக இந்த திட்டம் மாநில அரசு பணியாளர்களுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்த புதிய தேசிய ஓய்வூதிய திட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போல நிலையான ஓய்வூதியத் தொகையை வழங்கவில்லை என சில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உறுதியாக எதிர்த்துவருகின்றனர். இந்த எதிப்பின் அடிப்படையில் சில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், மத்திய அரசு இந்த எதிர்பார்ப்புகளுக்கும் யூகங்களுக்கும் பதில் அளிக்காமல் இருந்தது.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை என்று நிராகரித்துள்ளது. மத்திய அரசு இதற்கு இரண்டு காரணங்களை காட்டுகிறது. ஒன்று உயரும் நீடித்த ஓய்வூதிய மசோதா மற்றும் வரையறை செய்யப்பட்ட பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்துக்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். இரண்டாவதாக, “இந்த மாற்றம் அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை அதிக உற்பத்தி மற்றும் சமூக பொருளாதார துறை வளர்ச்சிக்கு விடுவிக்க உதவியது” என்று கூறுகிறது.
இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் பணியாளர்களுக்கு நிலையான ஓய்வூதியத்தை வழங்கவில்லை. ஆனால், அவர்களுடைய ஓய்வூதிய பாதுகாப்பு நிதியை மத்திய அரசின் பத்திரங்களிலும், கார்ப்பரேட் பத்திரங்களிலும், நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்வதற்கும் சந்தாதாரர்களாக இருப்பதற்கும் அனுமதிக்கிறது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கும் அரசின் பங்கேற்பு நிதியை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், மத்திய அரசு பணியாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் 2 அடுக்கில் முதலீடு செய்யவும் பிரிவு 80 சி-யின் படி வரி சலுகை பெறவும் அனுமதி அளித்தது. இது போன்ற முதலீடுகள் 3 ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைக்கப்படும். இது முதிர்ச்சியடைந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் பாதுகாப்பு நிதியின் வரி இல்லாத பகுதியை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசு ஊழியர்களை மிகவும் கவர்ந்துள்ளன.