Older people no need to come to Ration Shops Tamil News : நியாய விலை கடைகளுக்கு நடந்து சென்று பொருள்கள் வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை வழங்கலாம் என்று உணவுப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஏற்கெனவே நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களைக் கடைக்கு அனுப்பி பொருட்களைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை எனத் தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பொது விநியோக திட்டத்தை சாராத பொருட்களை எக்காரணம் கொண்டும் கட்டாய விற்பனை செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil