Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 86-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற, பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது!
தெ. ஆப்பிரிக்காவில் வவ்வால்கள் இடையே, ‘நியோகோவ்’ என்ற வைரஸ் பரவியுள்ளது. இது தற்போதைய கொரோனா வைரஸை போல வேகமாக பரவும் தன்மை கொண்டனது. ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இப்போது இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu News LIVE Updates
தமிழ்நாட்டில் கடந்த சில ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கால் ரேஷன் கடைகள் செயல்படாத நிலையில், நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
2019-20 நிதியாண்டுக்கான, தேசிய மற்றும் மாநில கட்சிகள் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில், ரூ.4,874 கோடியுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. ரூ.698 கோடி சொத்துகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி 2வது இடமும், காங்கிரஸ் ரூ.588 கோடி சொத்துகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
நகர்ப்புற தேர்தலில் போட்டியிட 12,838 பதவிகளுக்கு இதுவரை 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி வார்டு உறுப்பினர் – 22, நகராட்சி வார்டு உறுப்பினர் – 30, பேரூராட்சி வார்டு உறுப்பினர் – 47 வேட்புமனுக்கள் தாக்கல் செயதுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் தங்களுக்கான பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்
சென்னையில் மேலும் 4,508 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கோவையில் மேலும் 3,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 5 பேர் பலியாகியள்ளனர். அதேபோல், செங்கல்பட்டில் மேலும் 1,614 பேருக்கு கொரோனா தொற்று – 2 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நேற்றைய பாதிப்பு 26,533 ஆக இருந்த நிலையில் 24,418 ஆக குறைந்துள்ளது.
நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கோரியுள்ள திமுக. கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமுகமாக கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜன. 31க்குள் வேட்பாளர் பட்டியலை அனுப்ப மாவட்ட நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதவி விலகாமல் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்தால், தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், ஏற்கனவெ வகித்த பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபலபாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற குடியரசுதின விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட இந்திய முப்படை வீரர்கள் விழா முடிந்து இன்று பாசறைக்கு திரும்பும் திரும்பியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.
கர்ப்பிணி பணி நியமன தடை அறிவிப்பை திரும்ப பெற்றது எஸ்.பி.ஐ வங்கி பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது எஸ்.பி.ஐ. வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஆஷ்லே பார்டி வென்றுள்ளார்
பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. கேட்க வேண்டியது பாஜகவின் கடமை, அதை ஏற்பதா இல்லையா என்பது அதிமுகவின் முடிவு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும், பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க அதிமுகவிடம் கோரியுள்ளோம். மாவட்ட தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்றும் அதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் என பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – பாஜக இடையே 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நகராட்சி, பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை தர அதிமுக தயாராக உள்ளதாகவும், ஒதுக்கும் இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், மாநகராட்சிகளில் அதிக இடங்களை பாஜக கேட்பதாகவும், ஆனால் மாநகராட்சிகளில் பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்க அதிமுக மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
பள்ளிக் கல்வித்துறையின் மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணபித்து பெற்றுகொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 31ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே தனித்து போட்டியிடுவதாகவும், போட்டியிடாத இடங்களில் யாருக்கும் ஆதரவு இல்லை என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 45 பறக்கும் படைகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்தலாம். சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் இல்லத்தை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நியோகோவ் எனும் புதுவகை வைரஸ் பரவும் நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும், பள்ளிகள் திறப்பில் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கூடுதல் பரிசுத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று காந்தி நினைவு தினத்தின் போது தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்படும். நாளை ஞாயிறு என்பதால் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
நியோ வைரஸ் குறித்து அச்சம் அடைய வேண்டியதில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்விற்கு பிறகு ஆளுநரான ஆர்.என்.ரவியின் மிரட்டல், உருட்டல் பாணிகள் அரசியலில் ஈடுபடாது. இது நாகலாந்து அல்லது தமிழகம் என்பதை அவர் உணர வேண்டும் என இன்றைய முரசொலி நாளிதழில் ஆளுநரை கண்டித்து செய்தி வந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 9 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 20வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவு முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி பகுதிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விசிகவுடன், இடப்பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஓசூர் அருகே சித்தாண்டபுரம் பகுதியின் அஞ்செட்டி பகுதியில், ஆடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி, காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 871 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் 3,35,939 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர்.
சென்னை, மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவொற்றியூர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
2019-20 நிதியாண்டுக்கான, தேசிய மற்றும் மாநில கட்சிகள் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில், மாநில கட்சிகளில், ரூ. 563. 47 கோடியுடன் சமாஜ்வாதி முதலிடமும், ரூ. 301. 47 கோடியுடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி 2வது இடம் மற்றும் 267. 61 கோடியுடன் அதிமுக 3வது இடத்திலும் உள்ளது.
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவிற்கு சமூக சமத்துவ படை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், அக்கட்சியின் நிறுவனர் சிவகாமி, திமுக கூட்டணியின் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையான இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. போட்டியில் 680 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட விஜய் அனுமதிய வழங்கிய நிலையில், இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் விஜய் தலைமையில், நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.