scorecardresearch

டிக்கெட் விலை கேட்டாலே தலைசுற்றுகிறதே !.. பயணிகள் ஷாக்  

விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பு மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் கூடுதலாக இருப்பதால் சிக்கல் எழுந்துள்ளது.

டிக்கெட் விலை கேட்டாலே தலைசுற்றுகிறதே !.. பயணிகள் ஷாக்  

விடுமுறை முடிந்து  சென்னைக்கு திரும்பு மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் கூடுதலாக இருப்பதால்  சிக்கல் எழுந்துள்ளது.

இந்த முறை கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை வந்துள்ளது. இதனால் அதிகமானோர் சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து ஜனவரி 1 ம் தேதி சென்னைக்கு மீண்டும் திரும்புவார்கள். இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு அதிகட்ச கட்டண்மாக ரூ. 1900 வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணம் ரூ. 999 ஆக உள்ளது.

இதுபோல நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.2,800 வசூலிக்கப்படுகிறது. மேலும் குறைபட்ட  கட்டணமாக ரூ. 1,300 ஆக உள்ளது. இதுபோல கோவையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு ரூ.2,900 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த விலை ரூ.799 ஆக உள்ளது.

மேலும் பெங்களூரிலிருந்து சென்னை வருபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1900 வரையும் குறைந்த பட்சமாக ரூ. 900 வரை வசூலிக்கப்படுகிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Omini bus rates people returning to chennai

Best of Express