/indian-express-tamil/media/media_files/P2zRrnb3ygffdGt5jW1C.jpg)
சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் காவல்துறை உத்தரவின் பேரில் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டைபுறவழிச்சாலைவழியாக கிளாம்பாக்கம் வந்தடையும் என்று அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், “ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிறகுபகுதிகளுக்கு செங்கல்பட்டுமார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டைபுறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று நகரத்தின் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.
இந்த தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்பனி பேருந்துகளில் ஏறிச்செல்லமாம்.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் கிழக்கு ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்தகட்டணத்திற்குமிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டணம் விவரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.