Advertisment

30 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது... உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!

சாலை வரி தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Omni Bus chennai

Omni Bus chennai

Omni Bus chennai : கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் செப்டம்பர் 1 முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. அதே போல் புறநகர் ரயில் சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Advertisment

கடந்த ஜூன் மாதம் சில நாட்கள் மண்டலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டபோதும் , சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துளை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பொதுமுடக்க தளர்வுகளில் முக்கிய அம்சமாக, சென்னையிலும் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளன. ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் பேருந்துகளை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அரசு தளர்த்த ஆம்னி பேருந்து சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

சாலை வரி தள்ளுபடி, 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் . தங்களுடைய ஐந்து கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது பேருந்துகள் ஓட தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை என்று கூறப்படுவதால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்பதால் ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் விரும்பவில்லை என்றும் செப்டம்பர் 30 க்கு பின்னர் நிலைமை ஓரளவு சீரானதும் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த சாலை வரி தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment