scorecardresearch

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு போறீங்களா..? உங்க ஊருக்கு பஸ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்கள் ஊருக்கு பேருந்து கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு போறீங்களா..? உங்க ஊருக்கு பஸ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையின் போது தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ஆம்னி தனியார் பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்கள் ஊருக்கு பேருந்து கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சொல்வது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் பயணிகள் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் சௌகரியமாக செல்ல திட்டமிடுகிறார்கள். தீபாவளி பண்டிகைக் காலத்தையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது என்பது ஓவ்வொரு ஆண்டும் பயணிகளால் புகார்கள் எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையின் போது தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ஆம்னி தனியார் பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை http://www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ஏசி இல்லாத இருக்கை, ரூ.690-1,170, ஏசி இல்லாத படுக்கை வசதி ரூ. 930 – 1,580 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ஏசி வசதியுடன் கூடிய இருக்கை வசதி பேருந்தில், ரூ. 870 – 1490, ஏசி படுக்கை வசதிக்கு ரூ. 1,170 – 2000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்தில், ஏசி இல்லாத இருக்கைக்கு ரூ.870 – 1,490, ஏசி இல்லாத படுக்கை வசதிக்கு ரூ. 1,200 – 2,050 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி வசதியூடன் கூடிய பேருந்தில் இருக்கையில் அமர்ந்து செல்ல, ரூ. 1,140 – 1,940, ஏசி படுக்கை வசதிக்கு ரூ. 1,450 – 2,530 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்லும் பேருந்தில் ஏசி அல்லாத இருக்கை வசதிக்கு ரூ.720 – 1,240 வரையிலும், ஏசி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.990 – 1,690 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்லும் ஏசி வசதி இருக்கை பேருந்தில், ரூ. 940 – 1,600 வரையிலும் ஏசி படுக்கை வசதிக்கு ரூ. 1,190 – 2030 வரை கட்டணம் வசூலிக்கலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Omni bus fare fixed for diwali festival season

Best of Express