ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பஸ் டிக்கெட் தொடர்பாக கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் சென்னை டு திருச்சிக்கு பஸ் கட்டணமாக ரூ.1610 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக ரூ.2,430 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1930 ஆகவும்; அதிகபட்சமாக ரூபாய் 3070 ஆகவும் உள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 2050 ஆகவும்; அதிகபட்ச கட்டணம் ரூபாய் 3,310 ஆகவும் உள்ளது.
சென்னை டு நெல்லை பொருத்தவரை குறைந்தபட்சம் ரூபாய் 2,380 ஆகவும்; அதிகபட்சம் ரூபாய் 3,310 ஆகவும் உள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 2, 610 ஆகவும்; அதிகபட்சமாக ரூபாய் 4,340 ஆகவும் உள்ளது.
சென்னை டு தூத்துக்குடிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 2320 ஆகவும்; அதிகபட்சம் ரூபாய் 4,340 ஆகவும் உள்ளது.
சென்னை டு சேலம் கட்டணம் குறைந்தபட்சம் ரூபாய் 1650 ஆகவும்; அதிகபட்சம் ரூபாய் 2500 ஆகும் உள்ளது.
மேலும் இந்த தொகையை வசூலிக்க உரிமை உள்ளதாகவும் இது தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர்.
தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசிய நிலையில் இந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“