Advertisment

பண்டிகைக் கால கொள்ளை... சென்னை- நெல்லை ஆம்னி கட்டணம் ரூ 3400

தென் மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது

author-image
WebDesk
New Update
பண்டிகைக் கால கொள்ளை... சென்னை- நெல்லை ஆம்னி கட்டணம் ரூ 3400

பண்டிகை கால தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை அதிகமாக வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisment

ஆயுதபூஜை, விஜயதசமி தசரா போன்ற பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலை காரணமாக வெளியூர் சென்ற பலரும் தங்களது சொநத ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், இதனை பயன்படுத்தி தனியார் சொகுசு பேருந்துகள் தங்களது கட்டணத்தை அதிகரித்துள்ளனர். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.   

இதில் இன்று சென்னையில் இருந்து நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ 3400 வரை கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இருந்து உடன்குடி செல்ம் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக ரூ270 நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை நாட்களை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சென்னையில் இருந்து வெகு தொலைவில் உள்ள தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், தங்களது பயணம் கடினமாக இருக்க கூடாது என்பதற்காக தனியார் சொகுசு பேருந்துகளில் பயணம் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு இப்போது அந்த பேருந்துகளின் கட்டணமே கடுமையாக அமைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment