ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து, ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தனர்.
தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. ஆனாலும், லட்சக் கணக்கான மக்கள் சென்னை போன்ற நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த பேருந்துகள் போதுமானதாக இல்லை. இதனால், மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில், வார இறுதி விடுமுறை மற்றும் விஜயதசமி விடுமுறைக்காக பலரும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள், 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து, ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கடந்த 5 நாட்களாக சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் அதிரடி சோதனை நடத்தி ஆய்வு செய்தனர். இதில், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால், தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“