கோவையில், பெட்ரோல் பங்கிற்கு கேஸ் நிரப்புவதற்காக சென்ற ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், உக்கடம் ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய எரிவாயு பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு கேஸ் நிரப்புவதற்காக ஆம்னி வேன் ஒன்று வந்துள்ளது.
அப்போது, வேனின் முன்புறத்தில் இருந்து புகை வந்ததால், வேன் ஓட்டுநர் அதனை பங்கின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார். வேனில் இருந்து ஓட்டுநர் இறங்கிய சில விநாடிகளில், அதில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பங்கில் இருந்த ஊழியர்கள் மின் இணைப்பை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“