ஓணம் பண்டிகை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலாக செப்.17ஆம் தேதி அலுவலக நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் அம்மக்கள் திருவோணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டடுவார்கள்.
Advertisment
அந்த வகையில் ஓணம் பண்டிகை கேரளாவில் வருகிற 8ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை குதுகலமாக கொண்டாடப்படும்.
தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனினும் சென்னையில் 8ஆம் தேதி ஒணம் பணடிகை தினத்தில் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலாக செப்.17ஆம் தேதி அலுவலக நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”