பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊரிற்கு சென்று கொண்டாட நினைக்கும் மக்களுக்கு, வருகின்ற 12 முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து வசதிகள் தமிழக அரசால் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு 6,500 சிறப்பு பேருந்துகள் குறிப்பிட்டுள்ள நான்கு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது ஊரிற்கு செல்வதற்காக, சென்னையில் உள்ள ஆறு சிறப்பு பேருந்து நிலையத்தில் இந்த பேருந்து வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பண்டிகைக்கு சொந்த ஊரிற்கு செல்ல நினைக்கும் மக்களுக்காக, முன்பதிவு வாய்ப்பை ஒரு மதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டனர்.
கும்பகோணம், கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், சேலம், மதுரை அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்து சேவைக்காக 1.33 லட்சம் மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையில் இருந்து 60,799 நபர்களும், பிற மாவட்டங்களுக்கு இடையே 72,860 பேரும் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil