/indian-express-tamil/media/media_files/SQXgQbUThGhNuuhqbkY6.jpg)
சிவகங்கை அருகே அடகு கடையில் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை; போலீஸ் தீவிர விசாரணை
சிவகங்கை அருகே அடகு கடையின் சுவற்றை துளையிட்டு 300 பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே மதகுபட்டியில் தச்சம்புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஏழுமலையான் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கடையின் சுவற்றை நவீன இயந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ,நகை மற்றும் பணம் வைத்து இருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து பாண்டித்துரை இந்த திருட்டு சம்பவம் குறித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே உமேஷ் பீரவீன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதகுபட்டி காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ பாண்டி காவலர் சாகுல் இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருடு போன நகை, சுமார் 300 பவுன் தங்க நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாய் பணம் என விசாரணையில் காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது. கடையின் உரிமையாளர் தரப்பில் இன்னும் அதிக அளவில் நகை இருந்ததாகவும் அதனை கணக்கிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதகுபட்டி காவல் நிலையத்தில் காவல் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று காவல் துறை தெரிவிக்கின்றது.
தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை இரவு நேர ரோந்து பாதுகாப்பு பணியினை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us