OPS vs EPS, AIADMK General Council meeting, Edappadi K Palaniswami (EPS) vs O Panneerselvam (OPS): அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரி இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று மனு அளித்தார்.
மேலும் சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் காவல்துறை கேள்வி நேற்று கேள்வி எழுப்பினர். மேலும், பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில் கடைசி நிமிடங்கள் வரை அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் நொடிக்கு நொடி மாற்றலாம் என்ற நிலை தற்போது நீடிக்கிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
தர்மம் என்றும் நிலைத்து நிற்கும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. நாளைய பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து, பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்துள்ளது
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தநிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதனால் வானகரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் இ.பி.எஸ் தரப்பு செய்தியாளர்கள் சந்திப்பு
சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கிழித்ததாக குற்றச்சாட்டு
தர்மம் வெல்லும் அராஜகம் வென்றதாக வரலாறு இல்லை – இ.பி.எஸ் தரப்பு கருத்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தை நோக்கி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொளர்த்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திடீரென ஊர்வலமாக சென்றனர். காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி: மனுதாரர்கள் அனைவரும் பொதுகுழுவை நடத்தலாம் என்கின்றனர். கட்சி விதிகளில் மட்டும் திருத்தம் செய்ய மட்டுமே ஆட்சேபம் தெரிவிக்கின்றனர் என்று கூறினார். மேலும், இந்த வழக்கில் சற்று நேரத்தில் நீதிபதி அவரது அறையில் வைத்து தீர்ப்பு வழங்குகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்:
ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளித்த பிறகே முன்மொழிவுகளை பொதுக்குழுவில் வைக்க முடியும்; கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமே பொறுப்பு என்று வாதிட்டனர்.
திடீரென பொதுக்குழுவில் எந்த விவகாரத்தையாவது எழுப்ப வேண்டுமென யாராவது சொன்னால் என்ன செய்வது? என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு ஒரு விவகாரத்தை முன்மொழிவது என்பது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்துள்ளது
இ.பி.எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய நாராயணன் இ.பி.எஸ் தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்தார். அதில், “அதிமுகவின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றும் எண்ணம் இல்லை; சுரேன் பழனிசாமி, ஆதித்தன் போன்றோர் அதிமுக உறுப்பினர்களே இல்லை; அதிமுக பொதுக்குழுவிற்க் எதிரான வழக்கு நீதிமன்ற பணி நேரத்தைக் கடத்தும் விசாரணை; பொதுக்குழுவில் முன்கூட்டியே எப்படி முடிவு செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக பொதுச்செயலாளர் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பறித்துக் கொண்டனர் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு தடை கோரிய மனுதாரர் தரப்பு கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படமாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்துள்ளது
பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை. பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது என்று ஈபிஎஸ் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
நாளை சென்னை வனகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். மேலும், அவர் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேருடன் ஆலோசனை நடத்தியும் வருகிறார்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2505 பேரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றார் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் 120 பேரை தவிர அனைவரிடமும் ஒப்புதல் கடித்தை அவர் பெற்றுள்ளார்.
அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவில் வழங்கப்பட்ட தீர்மானங்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படாததால் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
அதிமுக பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு வாருங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்; அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் தவறு மேல் தவறு செய்கிறார். ஓ.பி.எஸ் தவறான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும். பொதுக்குழுவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஓ.பி.எஸ் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது கூறினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த, தென்சென்னை தெற்குகிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தார். இதன்மூலம்,ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6ஆக குறைந்தது.
அதிமுக-வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்த நிலையில், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓ.பி.எஸ். தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதே நேரம், இ.பி.எஸ் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு இன்று மதியம் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு .
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்படுள்ளது. தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர்.
நாளை பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் கட்சியின் வரவு, செலவு விவரங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1972இல் இருந்து எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது. அதிகமுகாவில் யாரும் ஓரம் கட்டப்படவில்லை. அதிமுகவில் எந்த அராஜகமும் நிகழவில்லை என்று வளர்மதி தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு தேர்தல் ஆணையம் செல்லப்போவதில்லை என்றும் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிப்போம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைதியலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தனிநபருக்கு சொந்தமான இடத்தில் பொதுக்குழு நடக்க இருப்பதால் காவல்துறையினரால் அனுமதி வழங்ககோ மறுக்கவோ இயலதா என்பதால் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரிப்பதாக ஆவடி காவல்நிலையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் நீதிமன்றம் தெரிவித்தபோல் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது
“மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ” என்று ஓ.பி.எஸ் ட்வீட் செய்துள்ளார்
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு போலீசுடன் ஆயுதப்படை போலீஸ் 30 பேர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.