போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

காவலர்கள் மீது தாக்குதலை தடுக்க ஏன் தமிழகத்தில் சிறப்பு சட்டங்கள் அமல்படுத்த கூடாது?

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க, கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் தமிழகத்தில் டி.ஜி.பி முதல் மாவட்ட எஸ்.பி வரை உள்ள அனைத்து அதிகாரிகளும் 170 வாகனங்கள் உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் வீடுகளில் சொந்தப் பயன்பாட்டிற்கும் மற்றும் ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு அரசு வாகனங்கள் பயன்படுத்துவதில்லை. காவல் துறை ஓட்டுநர்கள் வேறு எங்கும் பணி அமர்த்துவதில்லை. அதே போல் காவலர்கள், காவல்துறையில் உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியமர்த்தபடுவதில்லை. இருப்பினும் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தீவிரவாதிகள், நக்சல்கள், சமூக விரேதிகள் ஆகியோரக்கு எதிரான வழக்குகளை விசாரித்த வழக்குகளை விசாரித்த உயர் காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஆட்சில் உள்ளவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் ஆகியோரின் வீடுகளில் ஆடர்லி முறையில் எந்த காவலர்கள் பணியில் அமர்த்தபடுவதில்லை. எனவே அவர்களின் பாதுகாப்பிற்கு மட்டுமே காவலர்கள் பணியமர்த்தபடுவதாகவும், சென்னையில் பணியாற்றும் காவல்துறையினர்க்கு ஏ,பி,சி என சிப்ட் முறையில் பணி வழங்குவதாகவும், மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கு பணிடத்திற்கு தகுந்தவாறு விடுப்பு அளிப்பதாகவும், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை பேணுவது காவல்துறையினர் பணி என்பது அதற்கு ஏற்ப விடுமுறைகள் அளித்து வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது்

இதனையடுத்து நீதிபதி அண்மைக்காலமாக காவல்துறையின் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகாரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் பிரச்சினை ஏற்படும் போது காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் ஆனால் காவலர்களுக்கு ஏற்படுத்தும். இது போன்ற துயரங்களில் என்ன செய்வது என தெரிவித்தார். மேலும் திட்டமிட்டு நடைபெறும் கொலை உள்ளிட்ட சம்பவங்களை நிறுத்தினால் மட்டுமே காவலர்கள் மீதான தாக்குதலை குறைக்க முடியும் எனவும் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் காவலர்கள் மீது தாக்குதலை தடுக்க ஏன் தமிழகத்தில் சிறப்பு சட்டங்கள் அமல்படுத்த கூடாது? என கேள்வி எழுப்பினார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், காவல்துறையினர்க்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close