scorecardresearch

திருச்சி விமாநிலையத்தில் அதிர்ச்சி: 1 கிலோ தங்கம் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் கடத்தி வந்த 506 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

 கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் கடத்தி வந்த 506 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 69 ஆயிரத்து 396 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

 இதே போல் அதே விமான நிலையத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் கடத்தி வந்த 509 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 87 ஆயிரத்து 594 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

  திருச்சி விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் வந்த ஆண், பெண் பயணிகளிடம் ஒரு கிலோ 15 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: One kg gold sized in trichy airport