சோலார், காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தினால் நாட்டுற்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி மிச்சமாகும் என அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் தெரிவித்துள்ளார்.
காற்றாலைகள் வளர்ச்சி குறித்து அகில இந்திய விண்ட் மில் ஆசோசியசேன் சார்பில் கோவை காளப்பட்டியில் தனியார் ஒட்டலில் "மைண்ட் ஆப் விண்டு" என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டு பின் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், “உலகம் உள்ளவரை காற்றும் சூரியனும் இருக்கும் என்பதால் இது போன்ற இயற்கை சக்தியை பயண்படுத்தி இந்தியா மாற்று எரிசக்தி பயன்படுத்தி மின்சார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாவ நாடு மூழுவதும் சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை பயன்படுத்தி வாகனம் இயக்கினால் நாட்டிற்கு வெளி நாடுகளில் இறக்குமதி செய்யும் பெட்ரோலுக்கு செலவு செய்யபடும் ரூபாய் ஒரு லட்சம் கோடி மிச்சமாகும்.
மாசற்ற சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி என்பது உலகிற்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது என்ற அவர் இதன் மூலம் சுற்றுசுழல் பாதிக்காதவாறு நமது மின் பயன்பாடு இருக்கும் என்றார்.
மேலும் வருகின்ற பட்ஜேட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் காற்றாலை மின் உற்பத்திக்கு என மானியம் என்பதை விட acceleration depreciation தொகையை 40% இருந்து 80% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இதன் மூலம் நாட்டில் சூரிய மற்றும் காற்றாலை தொழில்முனைவோர் களும் முதலீடும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சோலார், காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தினால் நாட்டுற்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி மிச்சமாகும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இந்தியாவின் முன்னனி வணிக எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன், புத்தகத்தின் எழுத்தாளர் கருணா மூர்த்தி, இந்திய காற்றாலை உற்பத்தி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் நாயர் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.