Ramanathapuram | ராமநாதபுரம் தொகுதியில், ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதாவது, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பா.ஜனதா கூட்டணி சார்பில் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது.
ஆனால் அவர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓ. பன்னீர் செல்வம் போட்டியிடுவதால் ராமநாதபுரம் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
அங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் சிட்டிங் எம்.பி. நவாஸ் கனி களம் காண்கிறார். அதிமுக சார்பில் ஜெய பெருமாள் போட்டியிடுகிறார்.
நாடு முழுக்க நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“