/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-09-at-11.05.59-AM.jpeg)
Trichy
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில், "ஒரு எம்.பி - ஒரு ஐடியா”- (One M.P. One idea) என்ற செயலாக்கத்தின் மூலம், கருத்தாக்கங்கள் பெற்று அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பரிசு வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக கல்வித்திறன், ஆரோக்கியம், குடிநீர் மற்றும் சுகாதாரம், குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, எரிசக்தி, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் சமூகசேவை போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகள் காணும் பொருட்டு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தொடர்பான கருத்தாக்கங்கள் பெறப்படும். அதில் தேர்வு செய்யப்படும் முதல் 3 நபர்களுக்கு ரொக்க பரிசாக முறையே ரூ.2,50,000/- ரூ.1,50,000/- மற்றும் ரூ.1,00,000/- கிடைக்கும்.
அதன்டிப்படையில், தமிழ்நாடு மாநிலம் முழுதும் தகுதியான நபர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற்று பரிசு பெற்றிட எம்.பி. திருச்சி சிவா உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து பரிந்துரை செய்துள்ளார்.
எனவே, மேற்கண்ட இனங்களில் புதுமையான மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுகள் குறித்த கருத்துருக்களை சமர்ப்பிக்க விரும்புவோர், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் இணையதளத்தில் www.mplads.nic.in தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளின்படி, விரிவான அறிக்கை தயார் செய்து (31.03.2023) தேதிக்குள், இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருச்சிராப்பள்ளி – 620001 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.