/indian-express-tamil/media/media_files/2025/04/21/MJKqr0i4ogE3GCpXFBmc.jpg)
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் செல்வதுரை, சிறப்பு உதவியாளர் ஐயப்பன் மற்றும் காவலர்கள் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
திண்டிவனம் - மயிலம் சாலையில் உள்ள அரிசி மில் அருகே இந்த வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தில் சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து 265 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.