கோவை மாவட்டத்தில், துக்க வீட்டில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
கோவை, கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். இவரது சடலத்தை உறவினர்கள் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்திருந்தனர்.
இன்று காலை துக்க நிகழ்ச்சிக்காக அவரது வீட்டிற்கு ஏராளமானோர் வந்து, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, அப்பகுதியில் காலை சுமார் 10:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பிரீசர் பாக்ஸுக்கு, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது, ஓடிக் கொண்டிருந்த ஜெனரேட்டில் பெட்ரோல் ஊற்றும் போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பத்மாவதி என்பவர் உயிரிழந்தார். மேலும், மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“