தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளகவுண்டன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்.
இவர் சனிக்கிழமை (அக்.28) இரவு கூடலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த வன அதிகாரி ஈஸ்வரனை எச்சரித்துள்ளார். இந்த இடத்தில் அனுமதி இன்றி உள்ளே நுழையோ, வேட்டையாடவோ அனுமதி இல்லை ” எனக் கூறியுள்ளார்.
ஆனால் ஈஸ்வரன் கேட்காமலும், கையில் இருந்த கத்தி போன்ற ஆயுதத்தை கீழே போடாமலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வனஅதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடலை தரக்கோரி கம்பம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“