சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஜூன் 2 வது வாரத்தில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்ன ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை அறிமுகம் செய்வதற்கு இத்திட்டம் இறுதி வடிவத்தை பெற்றுள்ளது. சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிக்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர். இதற்கு மாற்றாக இவை அனைத்தும் ஒரே பயண சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ளபட உள்ளது.