சென்னையில் பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்திற்கும் ஒரே பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை என அனைத்திற்கும் ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்கிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் உயர்கணிணி மேம்பாட்டு மையத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகர பேருந்து, மற்றும் புறநகர் ரயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது.
இவை அனைத்தையும் ஒரே பயணசீட்டில் கொண்டு வரும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், தினமும் வேலைக்கு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.