scorecardresearch

ரயில், பஸ்,மெட்ரோ எல்லாவற்றிற்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் புதிய திட்டம்

மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதி குறித்து ஆலோசிக்க மாநகர போக்குவரத்துக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ரயில், பஸ்,மெட்ரோ எல்லாவற்றிற்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் புதிய திட்டம்
அனைத்து பயணத்திற்கும் ஒரே டிக்கெட்

Single Ticket System: சென்னையில் இனி பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ஆகியவற்றில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் உபயோகிக்கும் படி சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில், சென்னை முழுவதும் பொது போக்குவரத்து வாகனங்களில் மக்கள் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, அரசுப் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அமல்படுத்த செயலி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

அதில் பயணசீட்டு பெற்றுக்கொள்ள, புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, எந்தெந்த போக்குவரத்து முறைகளில் பயணிக்கவுள்ளார்கள் என்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

அதன் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகையை செலுத்தி பயணசீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: One ticket to all public transport services by tamil nadu government